CAA, NPR-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் தேவையில்லை: அஜித் பவார்

0 2131

குடியுரிமை திருத்த சட்டம் (citizen amendment act), தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு (npr)  ஆகியவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர துணை முதலமைச்சருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில்  அஜித் பவார் அளித்த பேட்டியில்,  குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது எனவும், இதனால் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

அந்த நடவடிக்கைகள் குறித்து வதந்தி பரப்பப்படுவதாகவும், ஆதலால் அதுகுறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அஜித் பவார் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments