எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். படிப்பில் சேர "டான்செட்" தேர்வு நடைபெற்றது
எம்.இ., எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், மண்டலக் கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் தொழிற்கல்வி சார் பட்டமேற்படிப்புகளில் சேர ஆண்டுதோறும் டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜனவரி 7 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்றது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 9 ஆயிரம் பேர் குறைவாக 33 ஆயிரத்து 146 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்திருந் நிலையில், நேற்று எம்.பி., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு டான்செட் தேர்வுகள் நடைபெற்றது. இன்று 2ம் கட்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
Comments