110 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்கிறது

0 2343

தமிழகம் முழுவதும் 110 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில், தரம் உயர்த்தப்பட வேண்டிய 110 பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்த அறிக்கையை நாளை((2.3.20)) மாலைக்குள் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments