சிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி வான்வெளி தாக்குதல்
சிரியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி நடத்திய வான்வெளி தாக்குதலில், சிரிய படையை சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர்.
சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ளது. இட்லிப் மாகாணத்தை போராளிகளிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் ரஷியா உதவியுடன் சிரியா தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போராளிகளுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை சிரிய - ரஷிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரித்திருந்த நிலையில், நேற்று துருக்கி படைகள் நடத்திய தாக்குதலில் 17 சிரிய படையினர் உயிரிழந்தனர்.
இன்று மீண்டும் ஆளில்லா விமானம் மூலம் ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சிரிய வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு சிரியா பதிலடி தாக்குதல் நடத்தும் என்பதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Comments