டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றிய சீக்கிய தந்தை, மகன்
டெல்லி வன்முறையின் போது பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோரை மீட்டு பாதுகாப்பு வழங்கிய சீக்கிய மதத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் மனிதநேய மகான்களாக பார்க்கப்படுகின்றனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா தொடர்பாக ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிப்புக்குள்ளான நிலையில் மொஹிந்தர் சிங் மற்றும் அவரது மகன் இருவரும் தனித்தனியே இருசக்கர வாகனங்களில் பயணித்துள்ளனர்.
அப்போது, கோகுல்புரி மற்றும் காதம்புரி பகுதியில் வன்முறைக் கும்பலுக்குப் பயந்து ஆங்காங்கே பதுங்கிக் கிடந்த 70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், சிறுவர்களை காப்பாற்றி தங்களின் வீடுகளில் தங்க வைத்தனர். தாடி வைத்திருந்த இஸ்லாமிய ஆண்களுக்கு, தங்களின் மத அடையாளமான டர்பன் என்ற தலைப்பாகையை அணிய வைத்து அவர்களைக் காப்பாற்றினர்.
டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறிய மொஹிந்தர் சிங் தன்னைப் போல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டார்.
Comments