கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்

0 9328

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன.

சமீபத்தில், குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைப்பதோடு, அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது.

இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பயனர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளன. மேலும், அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை பாகிஸ்தானியர்களிடமிருந்து பறிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments