Ind Vs NZ - முதல் இன்னிங்சின் இரண்டாம் நாளில் நியூசிலாந்து நிதான ஆட்டம்....
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது.
க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 63 எடுத்திருந்தது.
இதையடுத்து, இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள், லாதம் 52 ரன்களிலும், ப்ளண்டெல் 30 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து வந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிக்கோலஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
உணவு இடைவேளை வரை அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
Comments