370ஆவது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் நாளை முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக நாளை உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவிக்க உள்ளது..
Comments