நயன்தாரா நடிக்கும் "மூக்குத்தி அம்மன்" திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0 2658

நடிகை நயன்தாரா நடிக்கும், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பண்பலை வானொலி அறிவிப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக பரிணாமித்த பாலாஜி, தற்போது, மூக்குத்தி அம்மன் திரைப்படம் மூலம், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில், அம்மன் வேடத்தில், நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

நேற்று முன்தினம் ஃபிரீ லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அம்மன் கையில் சூலம் இருப்பது இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா தோன்றும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அம்மன் வேடம் ஏற்றதால், சைவத்திற்கு மாறிய நயன்தாரா, விரதம் இருந்து, மூக்குத்தி அம்மனாக தோன்றியதாகவும், படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments