டெல்லியில் இருப்பது போன்று மதுரையிலும் நவீன எய்ம்ஸ் மருத்துவமனை
டெல்லியில் இருப்பது போன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் மேம்படுத்தப்பட்ட நவீன ஆய்வக வசதி கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மருத்துவமனையின் முதற்கட்ட பணியாக சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்றார். ஜய்க்கா நிதி நிறுவனக்குழு மூன்று முறை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், தொடர்ந்து வரும் சில மாதங்களில் நிதி விடுவிக்கப்படும் என்றார்.
ஆகவே விரைவில் மதுரை மக்கள் எய்ம்ஸ் கட்டுமானத்தை நிறைவு பெற்று பார்க்க முடியும் என்றும் ஹர்ஷவர்தன் உறுதியளித்தார்.
Comments