நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு கூட்டம் நாளை ஆரம்பம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடங்க உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் டெல்லியில் நடந்த வன்முறை மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவை குறித்து எதிர்கட்சிகள் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளன. எனவே இந்த கூட்டத்தொடரில் புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
மேலும் வாடகைத்தாய் மற்றும் வரி பங்கீடு தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments