அமெரிக்கா - தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
கத்தார் தலைநகர் தோஹாவில், அமெரிக்கா - தாலீபன்கள் இடையே மாலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கத்தார் தூதர் P. குமரனும் கலந்து கொண்டார். அண்டைநாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 18 ஆண்டுகளாக குண்டு வெடிப்பு சம்பவங்கள், நித்தம் நித்தம் நிகழுவது, தொடர் கதையாக நீடித்து வந்தது.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் மூலம், ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புகள், 14 மாதங்களில் படிப்படியாக திரும்ப பெறப்படும் என்றும், படை வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரத்து 600 ஆக குறைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது .
முன்னதாக, தோஹா வந்து சேர்ந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, கத்தார் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா முகம்மது பின் அப்துல்லா ரஹ்மானை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Comments