வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

0 1227

11வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மார்ச் 11 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

20 சதவீத ஊதிய உயர்வு, புதிய ஊதிய ஒப்பந்தம், வாரத்தில் சனி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில் மும்பையில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, 15 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக வங்கி தரப்பில் உறுதியளித்ததையடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்தி வைத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments