மல்யுத்த போட்டியில் வீரர் ஒருவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற 16 வயது மாணவி

0 989

அமெரிக்காவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில், வீரர் ஒருவரை,16 வயது மாணவி வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

அந்நாட்டின் வடக்கு கரோலினா மாகாண உயர் நிலை பள்ளிகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டி, Greensboro என்ற நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற Heaven Fitch என்ற இந்த மாணவி, 48 கிலோ எடை பிரிவில், தம்முடன் மோதிய மாணவரை, மிகவும் லாவகமாக வீழ்த்தினார்.

மல்யுத்த வரலாற்றில் மாணவ வீரர் ஒருவரை வீழ்த்திய முதல் மாணவி என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த சாதனை மாணவி Heaven Fitch க்கு முடிவில் பரிசு வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments