KRS அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஜனவரி, பிப்ரவரி மாத தேவைகளுக்காக கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது.
ஆண்டுந்தோறும் 176.75 டிஎம்சி தண்ணீர், கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் திறந்து விடவேண்டும் என உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதன்படி ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு 5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். அந்த வகையில் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 ஆயிரத்து 885 கனஅடி தண்ணீர் கடந்த 25ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நீரானது 4 நாட்களுக்குப் பின்பு தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காலையில் ஒகேனக்கல் வந்தடைந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 800 கனஅடி நீர் ஓகேனக்கலுக்கு வந்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
Comments