கொரோனா வதந்தியால் டிக்டாக்கில் இணைந்த உலக சுகாதார அமைப்பு

0 1451

கொரோனா குறித்த வதந்திகளை தடுக்க உலக சுகாதார அமைப்பு டிக்டாக்கில் இணைந்துள்ளது.

சீனாவில் உருவாகி பல நாடுகளில் பரவி மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பல வதந்திகள் பரவுகின்றன.

குறிப்பாக சமூக ஊடகங்ககளின் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளதாகவும், கொரோனா பரவாத நாடுகளில் கூட பாதிப்புகள் உள்ளதாகவும், மேலும் கொரோனாவுக்கு தங்களிடம் மருந்துகள் இருப்பதாக கூறி உறுதிப்படுத்தப்படாத பல தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இதனால் ஏற்கனவே அச்சத்தில் உள்ள மக்கள் இது போன்ற தவறான தகவல்கள் மூலம் பெரும் அவதிக்குளாகின்றனர். இந்த நடவடிக்கைகைளை தடுக்க பாதிக்கப்பட்ட நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு டிக்டாக் செயலி மூலம் கொரோனா குறித்த ஆலோசைனைகளை வழங்க உள்ளது. இதற்காக உலக சுகாதார அமைப்பு தன்னுடைய அதிகாரபூர்வ டிக்டாக் கணக்கை துவக்கி உள்ளது. அதில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகிகள் கொரோனா குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments