மலேசியாவின் புதிய பிரதமராக முஹைதீன் யாசின் நியமனம்
மலேசிய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் புதிய பிரதமராக 72 வயது முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்டு உள்ளார்.
உலகில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அண்மையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, பிரதமர் மகாதீர்முகமது , தமது பதவியை ராஜினாமாசெய்திருந்தார்.
இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட மகாதீர் முகமது , தொடர்ந்து பதவியை தக்க வைக்கவும்,எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியை தட்டிப்பறிக்கவும் கடும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வந்தனர்.
மலேசிய அரசியலில், அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை((Muhyiddin Yassin)) புதிய பிரதமராக நியமித்து, அந்நாட்டு மன்னர், அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார்.
இதன்மூலம், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. மலேசியாவின் புதிய பிரதமராக Muhyiddin Yassin ஞாயிறன்று பதவி ஏற்றுக்கொள்கிறார்.
Comments