ஒரே இடத்தில் 27,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி உலக சாதனை..!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என 27 ஆயிரம் பேருக்கு, 19 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்கிய நிகழ்வு உலக சாதனையாகியுள்ளது.
இதற்காக நடைபெற்ற மாபெரும் முகாமில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக் கூடிய கருவிகள், சக்கர நாற்காலிகள் என 56 ஆயிரம் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஒரே இடத்தில் அதிகம்பேருக்கு நலத்திட்ட உதவிகள், பெரும் எண்ணிக்கையில் சக்கரநாற்காலிகள் ஒரே இடத்தில் வைத்து விநியோகம் என மூன்று உலக சாதனைகளையும் இந்த முகாம் படைத்துள்ளது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுபோன்ற முகாம்கள் முந்தைய ஆட்சிகளில் எப்போதாவது அரிதாகவே நடைபெற்றதாகவும், ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments