சாமியார் நித்திக்கு தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சாமியார் நித்தியானந்தாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
நித்தியானந்தா தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி முன்னாள் பெண் சீடர் ஒருவர், 2010 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஜாமின் பெற்றிருந்த நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நித்தியானந்தா எங்குள்ளார் என்ற தகவல் கிடைக்காததால் கைது செய்யமுடியவில்லை என்று கூறிய காவல்துறை அதிகாரிகள், தேடுதல் வாரண்ட் பிறப்பிக்குமாறு முறையிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நித்தியானந்தாவிற்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது.
Comments