புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி கைது

0 1042

புல்வாமா தாக்குதலை நிகழ்த்துவதற்காக காரில் வெடிபொருட்களை நிரப்பி, அதனை தாக்குதல் நடந்த இடத்துக்கு 500 மீட்டர் தூரத்துக்கு முன்பு வரை ஓட்டியும் வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.

இந்நிலையில் ஓராண்டுக்கு பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஷகிர் பஷீர் மாக்ரே என்பவனை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புல்வாமா மாவட்டம் காகபோரா பகுதியை சேர்ந்த அவன் தான், தாக்குதலை நிகழ்த்திய மாருதி ஈகோ காரில் வெடிபொருட்களை நிரப்பியவன்.

அதுமட்டுமின்றி காரை மோதி வெடிக்கச் செய்த தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில் அகமது தாரை முன்னிருக்கையில் அமர வைத்து, சம்பவம் நடந்த இடத்துக்கு 500 மீட்டர் தூரத்துக்கு முன்பு வரை அதனை ஓட்டியும் வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments