நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை

0 959

அமெரிக்காவில் நியூயார்க் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஆண்டு தோறும் 2 ஆயிரத்து 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இத்தகைய ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வர வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன.

ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments