லீப் நாள் பிப்ரவரி 29 -ன் கிரிகோரியன் நாட்காட்டி பின்னணி
நமது காலண்டரில் ஒவ்வொரு ஆண்டின் 12 மாதங்களில் 30,31 நாட்கள் உள்ளன. ஆனால் இரண்டாம் மாதமாக வரும் பிப்ரவரியில் 28 நாட்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் மாதமாக 29 நாட்களும் வருகிறது. அதற்கான வரலாற்றை பார்ப்போம்.
ஒரு வருடத்திற்கு 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்கள் (ஒன்றரை நாள்களும் ) லீப் வருடத்திற்கு 366 நாட்கள் 12 மாதங்கள் 52 வாரங்கள் ( இரண்டு நாட்களும் ) உள்ளன.
பழங்கால கிரிகோரிய நாட்காட்டி படி லீப் ஆண்டு என்பது நான்கில் பெருக்கங்களாக வருவபை. 2016,2020, 2024 போன்றவை லீப் ஆண்டாக இருந்து வருகின்றன. இதற்கு கிரிகோரிய ஆண்டின் நெட்டாண்டு என பெயரிட்டுள்ளனர். ஆனால் நான்கின் பெருக்கங்களாக “00”என முடியும் ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதில்லை.
உதாரணத்திற்க்கு “00” என முடியும் 2000 ஆம் ஆண்டு 29 நாட்கள் கொண்ட லீப் வருடமாக இருந்துள்ளது. ஆனால் 1900 மற்றும் 2100 ஆம் ஆண்டுகள் லீப் ஆண்டாக இருப்பதில்லை. நாம் நம் வாழ்நாளில் அனைத்து லீப் ஆண்டுகளை கடந்திருப்போம் ஆனால் எதிர்காலத்தினர் அவர்கள் வாழ்நாளில் ஒரு லீப் ஆண்டை தவிர்ப்பார்கள்.
பூமி சூரியனை சுற்றும் கால அவகாசம் 365 நாட்கள் 6 மணி நேரமாகும். இதை வைத்து தான் நமது நாள்காட்டி படி நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனின் சுற்றுபாதையை அடைய பூமி எடுத்து கொள்ளும் கால அவகாசத்தை விட நமது நாள்காட்டியின் ஆக மொத்த நாட்களில் 6 மணி நேரங்கள் குறைவாக உள்ளது.
இதனை சரிசெய்ய கிமு. 42 ஆம் நூற்றாண்டின் ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர் கிரிகோரிய நாட்காட்டி விதிபடி மூன்று வருடங்களிலிருந்து கால் நாட்களை எடுத்து நான்காம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்களாக சேர்த்து லீப் ஆண்டாக கொண்டு வந்தார். உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற இந்த கிரிகோரிய நாள்காட்டி மற்ற நாடுகளுக்கு முரணாகவே அமைந்துள்ளது. கிரிகோரிய நாள்காட்டியில் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி இருந்துள்ளது. மேலும் ஸ்வீடன் நாட்டின் காலண்டரில் பிப்ரவரி 30 ம் தேதி இருந்துள்ளது. பின்னர் அது முதலே கைவிடபட்டு அழிந்துள்ளது.
கிரிகோரிய நாள்காட்டி முன் பயன்படுத்திய உமேனியா நாள்காட்டி படி வருடத்திற்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்து வந்துள்ளன. அதன் பின் ஜூலியஸ் சீசரால் அறிமுகபடுத்தபட்ட கிரிகோரிய காலண்டரில் ஆவர் பெயரிலேயே ஜூலை என்று ஏழாவது மாதமாகவும், அவருக்கு பின் வந்த அரசர் அகஸ்டஸ் சீசர் பெயரில் எட்டாவது மாதமாக ஆகஸ்ட் சேர்க்கபட்டு தொடர்ந்து இந்த இரண்டு மாதத்திற்கும் மட்டுமே 31 நாட்களை வைத்துள்ளனர்.
பூமி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் நேரம் 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடம் , 46 வினாடியாகும். ஆனால் நம் சூரிய நாள்காட்டி படி 365 நாட்கள் உள்ள நிலையில் மீதமுள்ள 5 மணி நேரம் 48 நிமிடம் , 46 வினாடியே தவிர்க்க இயலாது மூன்று ஆண்டுகளிலிருந்து இந்த மணி நேரங்களை சேர்த்து நான்காவது ஆண்டான லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளாக சேர்க்கபட்டுள்ளது.
இது போன்று நான்கு ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நாள் சேர்க்கபடுவதால் 100 வருடங்களில் 18 மணி நேரம் 43 வினாடி சேர்க்கபடுகிறது. ஆதலால் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லீப் வருடம் கணக்கில் இருப்பதில்லை. இது மாதிரியான பல எதிர் சீர்த்திருத்தங்கள் கொண்ட இந்த கிரிக்கோ நாட்காட்டியை அறிஞர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments