துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப நேட்டோ மறுப்பு
ரஷிய தாக்குதலில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள நேட்டோ அமைப்பு, துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துள்ளது.
சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா ஆதரவுடன் சிரியாவும், போராளிகளின் ஆதரவுடன் துருக்கியும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரியா-ரஷிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி, இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த அவ்வமைப்பிற்கு கோரிக்கை விடுத்தது.
அதன்படி பெல்ஜியத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்ற நேட்டோ அவசர ஆலோசனை கூட்டத்தில், உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துருக்கிக்கு கூடுதல் படைகளை அனுப்பும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
Comments