டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்க முடிவு என தகவல்

0 1844

உத்தரப் பிரதேச அரசை தொடர்ந்து, டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிறு முதல் வியாழன் வரை நடந்த கலவரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இதற்கு காரணமானவர்கள் என ஆயிரம் பேரை டெல்லி போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. இவர்களில் 600 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியவர்களை உடனே பிடிக்குமாறு குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலவரத்தை பயன்படுத்தி பல கிரிமினங்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய 400 பேரை கண்டறிந்து அவர்களுக்கு உ.பி அரசு இழப்பீடு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments