அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் 2 வது தவணையாக 8004 கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல்

0 2300

ஏர்டெல் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் இரண்டாவது தவணையாக எட்டாயிரத்து நான்கு கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது.

வோடாபோன், ஏர்டெல், டாட்டா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் உரிமக் கட்டணம், அலைக்கற்றைக் கட்டணம், அபராதம், வட்டி ஆகிய வகைகளில் அரசுக்குப் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தன.

நிலுவைத் தொகைக் கணக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறை மதிப்பீட்டைவிட, நிறுவனங்கள் கூறும் நிலுவைத் தொகை மதிப்பீடு குறைவாக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் 39 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக அரசு மதிப்பிட்டுள்ளது.

15 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிலுவை உள்ளதாகக் கூறிய ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி 17ஆம் தேதி 10ஆயிரம் கோடி ரூபாயைச் செலுத்தியது. இந்நிலையில் மேலும் எட்டாயிரத்து நான்கு கோடி ரூபாயை இன்று செலுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments