அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் முக்கிய வீதிகள் போர்களமாக காட்சியளித்தன.
பொது போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்தும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்க வலியுறுத்தியும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் தலைநகர் சாண்டியாகோவில்(Santiago) நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதையடுத்து கல்எறி தாக்குதல் நடத்தியவர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
Comments