வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ரஜினி கூறியதாக தகவல்
சென்னை போலீஸ் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
துக்ளக் விழாவில் பெரியார் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில், ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சி நடைபெற்றது.
இதன் காரணமாக போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினி இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது. 6 போலீசார் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் ரஜினி வீட்டிற்கு காவல் காத்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ளதால், போயஸ் தோட்டத்தில் ஏற்கெனவே 2 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. இந்நிலையில், தனது வீட்டிற்கு தனியே போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என காவல்துறையினரிடம் ரஜினி வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்தே, நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சிஏஏ விவகாரத்திலும் ரஜினியை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்த நிலையில், பாதுகாப்பை தொடர்வதா விலக்கிக் கொள்வதா என்பது குறித்து, சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments