ட்ரம்பின் வருகைக்கான மொத்த செலவை வெளியீட்ட குஜராத் அரசு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரிவித்துள்ள குஜராத் முதலமைச்சர், மாநில அரசு 8 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
அரசு முறை பயணமாக கடந்த 24 ஆம் தேதி இந்தியா வந்த ட்ரம்ப், குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில், மொத்தம் 3 மணி நேர ட்ரம்ப் நிகழ்ச்சிகளுக்கு 100 கோடி ரூபாய் செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய் ரூபானி, ட்ரம்ப் வருகைக்காக மொத்தம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக விளக்கம் அளித்தார்.
அதில் 8 கோடி ரூபாய் மாநில அரசின் நிதியிலும், மீதி செலவுகள் அகமதாபாத் மாநகராட்சி நிதியிலும் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டார்.
Comments