பொதுத்தேர்வு பணிகள் : கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க 37 மாவட்டங்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட 31 அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.
12-ஆம் வகுப்புக்கு மார்ச் 2-ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு மார்ச் 27-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளாக பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த பல்வேறு இயக்குநர், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments