5-வது நாளாக தங்கம் விலையில் சரிவு..
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 624 ரூபாய் குறைந்துள்ளது. அண்மையில் 33 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் மீண்டும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அண்மையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 33 ஆயிரம் ரூபாயைக் கடந்து இமாலய உச்சத்தை எட்டியது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று 4,064 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 78 ரூபாய் குறைந்து 3,986 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், 624 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 600 ரூபாய் விலை குறைந்து 47 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வால் கலக்கத்திலிருந்த பொதுமக்கள், ஒரு சவரன் மீண்டும் 32 ஆயிரத்துக்கும் கீழே குறைந்திருப்பதால் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
Comments