அதிகச் சுமை வைத்திருந்த மொரீசியஸ் அதிபரைத் தடுத்து நிறுத்திய ஏர் இந்தியா ஊழியர் draft

0 1657

அதிகச் சுமை வைத்திருந்ததற்காக வாரணாசி விமான நிலையத்தில் மொரீசியஸ் அதிபரை ஏர் இந்தியா ஊழியர் தடுத்து நிறுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மொரீசியஸ் அதிபர் பிரித்விராஜ் சிங் ரூபன், 6 பேருடன் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்தார். வழிபாட்டை முடித்தபின் டெல்லி செல்வதற்காக வாரணாசி விமான நிலையத்துக்குச் சென்றனர்.

image

அப்போது அனுமதிக்கப்பட்டதைவிட அதிகச் சுமை உள்ளதாகக் கூறி ஏர் இந்தியா ஊழியர் மொரீசியஸ் அதிபரைத் தடுத்து நிறுத்தியுள்ளார். கூடுதல் சுமைக்குக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த விமான நிலைய இயக்குநர், விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா அதிகாரிகள் ஆகியோரிடம் பேசியபின் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி மொரீசியஸ் அதிபரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments