பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் தண்டனை அறிவிப்பு
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என அரசு தேர்வுகள்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வறையில் தேர்வு தொடர்பான புத்தகம், துண்டு சீட்டுகள் வைத்திருந்து தானாக முன்வந்து ஒப்புக் கொண்டால், தலைமை கண்காணிப்பாளர் எச்சரித்து விளக்கம் எழுதி வாங்குவார் என்றும், மற்றொரு தேர்வரை பார்த்து காப்பி அடித்தாலோ, வெளியில் இருந்து உதவி பெற்றாலோ தகுதிநீக்கம் செய்யப்படுவதுடன், ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் தகுதிநீக்கம் செய்வதுடன், வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments