பல்லடம் வங்கி கொள்ளையில் டெல்லியில் பதுங்கியிருந்த ஒரு கொள்ளையன் கைது

0 2255

திருப்பூர் அருகே எஸ்பிஐ வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையன் ஒருவனை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த பாரத ஸ்டேட் வங்கியின், லாக்கர்களை உடைத்து 500 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தனிப்படை போலீசார் டெல்லி, லக்னோ, ஒடிசா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவன் டெல்லியில் பதுங்கியிருந்ததை அறிந்த தனிப்படை போலீசார், டெல்லி போலீசார் உதவியுடன் அவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவனை திருப்பூருக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments