கொரானா எதிரொலி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் திட்டமிட்டபடி நடக்குமா..?

0 912

கொரானா தொற்றின் எதிரொலியாக உம்ரா பயணத்திற்கு சவூதி அரசு தடை விதித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்ய முடியுமா என கேரளாவைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தவிப்பில் உள்ளனர்.

இஸ்லாமியர்கள், ஹஜ் காலம் தவிர ஆண்டின் இதர மாதங்களில் உம்ரா எனப்படும் சிறு புனிதப் பயணத்தை மக்கா, மதீனாவுக்கு மேற்கொள்ளுவது வழக்கம். ஆனால் கொரானா தொற்றை அடுத்து அதற்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம், வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும். இதற்காக கேரளாவைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து அதற்கான அனுமதியை கேரள ஹஜ் கமிட்டி வழங்கி உள்ளது. இதை அடுத்து தடையை எப்போது சவூதி அரசு விலக்கும் என்ற எதிர்பார்ப்பில் இவர்கள் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments