கொரானா தாக்குதல்: பணக்கார நாடுகளுக்கு பில்கேட்ஸ் வேண்டுகோள்

0 6127

பொருளாதார ரீதியாக நலிவடைந்த நாடுகள் கொரானா தாக்குதலை எதிர்கொள்ள பணக்கார நாடுகள் உதவி செய்ய வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனாவில் துவங்கிய கொரானா இன்று 60 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி உள்ளது. இதன் தொற்று மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின் (New England Journal of Medicine) என்ற இதழில் பில் கேட்ஸ் எழுதிய தலையங்கம் வெளியாகி உள்ளது. அதில் கொரானா தாக்குதலை இந்த நூற்றாண்டின் பெரிய பாதிப்பு என்று வர்ணித்துள்ள பில் கேட்ஸ்.

ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் உதவிட தயாராக இருக்குமாறு வளர்ந்த நாட்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்காக பில்கேட்ஸின் அறக்கட்டளை ஏற்கனவே சுமார் 725 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments