IND vs NZ இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்: 242 ரன்கள் எடுத்த இந்திய அணி

0 2618

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்கள் எடுத்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, சேட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் ஆளுக்கு 54 ரன்கள் எடுத்தனர்.

ஹனுமா விகாரி 55 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்துடனும் குறைந்த ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 63 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்சை விளையாடி வருகின்றனர். வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments