புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதி கைது

0 3979

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒருவனை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவனுக்கு உதவிய ஷாகிர் பஷீர் மேக்ரி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் எண்ணை கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவன் பல்வேறு சமயங்களில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பணம் போன்றவற்றை சேகரித்து வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments