ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களின் தாக்குதலை தடுத்திடும் வகையில் 9 நேட்டோ நாடுகள் போர் பயிற்சி
இத்தாலி நாட்டையொட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில், "டைனமிக் மந்தா" (Dynamic Manta) என்ற தலைப்பில், ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்களின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கான 2 வாரகால போர் பயிற்சியில் 9 நேட்டோ நாடுகள் ஈடுபட்டுள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், துருக்கி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின், நீர்மூழ்கி கப்பல்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், இந்த "டைனமிக் மந்தா" போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளன.
வடக்கு அட்லாண்டிக் பிராந்திய ஒப்பந்தத்தின்படி, தாக்குதலை முறியடிக்கும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டியதன் அவசர அவசியக் ஏற்பட்டிருப்பதாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு படைப்பிரிவு தளபதிகள் கூறியுள்ளனர்.
Comments