கடற்கரையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் குழந்தை கடத்தல்

0 1019

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தையை மீட்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் வசித்து வரும், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பாட்ஷாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரது மனைவி சினேகா, 8 மாத கைக் குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தங்கி பாசி ஊசி விற்பனை செய்யக்கூடிய பெற்றோர்களை சந்திப்பதற்காக சென்னை வந்த சினேகா, நேற்று முன்தினம் இரவு பெற்றோர் மற்றும் தனது 8 மாத கை குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை எழுந்து பார்த்த போது கைக்குழந்தையை காணவில்லை என்று சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சாஸ்திரிநகர் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அதிகாலையில் ஆட்டோவில் வந்த மூன்று பெண்கள், ஒரு ஆண் என நான்கு பேர் குழந்தையை கடத்தி செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.

ஆட்டோ புனித தோமையர் மலை வரை சென்றிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ள நிலையில், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments