ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானுடன் இந்தியா இணைந்து விளையாடும்
துபாயில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா உறுதியாக விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிய கோப்பை தொடர், பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது என்றார். இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இணைந்து விளையாடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், வருகிற 3ந் தேதி துபாயில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கங்குலி பங்கேற்கிறார்.
Comments