நிர்பயா வழக்கு : உச்சநீதிமன்றத்தில் பவன்குப்தா சீராய்வு மனு தாக்கல்

0 1093

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான்.

2012ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ் குமார், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கான மரண தண்டனையை மார்ச் மாதம் 3-ஆம் தேதி திகார் சிறையில் நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்தான். மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் அந்த மனுவில் பவன் குப்தா கோரியிருந்தான். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ள நிலையில் பவன் குப்தா சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளான்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments