சிரியா உள்நாட்டுப் போரால் ரஷ்யா-துருக்கி இடையே பதற்றம் அதிகரிப்பு
சிரியா அரசுப் படையால் 33 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுபோரில் அரசு படைகளுக்கு, ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது நடைபெற்றுள்ள வான்வழி தாக்குதலானது, ரஷ்யாவின் நேரடி தலையீடு அல்லது அவர்களின் ஆயுதங்களின் உதவியில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.
இதனிடையே, இந்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதினும், துருக்கி அதிபர் எர்டோகனும் தொலைபேசியில் ஆலோசித்துள்ளனர். அப்போது, தற்போதைய சூழல் தொடர்பாக எர்டோகனிடம், புதின் கவலை தெரிவித்துள்ளார். ஆனாலும், துருக்கி தரப்பில் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments