திரௌபதி வசூல்..! ஒரு கோடிப்பே..! குலுங்கிய திரையரங்குகள்
தமிழகத்தில் முன்னணி கதாநாயகர்கள் இல்லாத ஒரு படத்தை, முதல் நாளிலேயே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த பெருமை திரௌபதி படத்திற்கு கிடைத்துள்ளது.
50 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம், முதல்நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.பிரபல நடிகர் இல்லாமல், பிரபல இயக்குனர் இல்லாமல் வெளியான திரௌபதி படத்திற்கு முதல் நாளில் கிடைத்த வரவேற்பு திரையரங்கு உரிமையாளர்களை வியக்க வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 330 திரையரங்குகளில் வெளியான திரௌபதி படத்திற்கு சென்னை நீங்கலாக பெரும்பாலான ஊர்களில் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி , தேனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் குலுங்கின என்றே கூறலாம்..!
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த படத்தை கூட்டமாகவும் சென்று பார்த்து வருகின்றனர். குறிப்பாக கடலூர் கிருஷ்ணாலயா திரையரங்கில் பெண்களுக்கு என்று பிரத்யேக காட்சி திரையிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பூஜை செய்தனர்.
பெரும்பாலான வட மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாய் படத்திற்கு செல்லும் திட்டத்துடன் திரையரங்குகளில் டிக்கெட்டுக்கள் மொத்தமாக முன்பதிவு செய்யப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மொத்தமே 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரௌபதி படம் முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதித்து இருப்பதாகவும் அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருப்பதாகவும் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்..!
Comments