இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் 17 ஆம் நூற்றாண்டின் ரகசிய கதவுகள்
இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரகசிய கதவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை குறித்து ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்தபோது, சுமார் மூன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு ரகசிய கதவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மரத்திலால் ஆன கதவை திறந்து பார்த்த போது மன்னரும் ராணியும் அமரும் மேல் அவைக்கு செல்லும் ரகசிய பாதையும் பென்சிலால் எழுதப்பட்ட சிறுசிறு குறிப்புகளும் அங்கு இருப்பது தெரிய வந்தது.
இந்த பாதையானது 1661-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை சீரமைப்புக்கு பின்னர், இந்த பாதை சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments