போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவை தடுக்க புதிய நடைமுறை
தமிழகத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நில உரிமையாளர்கள், வட்ட அலுவலகங்களுக்கு சென்று தாங்கள் விற்பனை செய்ய விரும்பும் சொத்துக்கள் குறித்து விண்ணப்பித்து, அதன் புலப்பட சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற வேண்டும். இது தொடர்பாக நில அளவையாளர் உரிய விசாரணை நடத்தி, தற்காலிக உட்பிரிவு ஆவணங்களை இணைய வழி தொடர்புடைய சார்பதிவகத்துக்கு அனுப்பி வைப்பார்.
அதன்பின்னர் நில உரிமையாளர் தனது நிலப் பரிவர்த்தனையை சார்பதிவகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் பின்னர் இணைய வழியிலான பட்டா மாறுதல் விவரங்கள் மீண்டும் புல தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments