டெல்லி குழந்தைகள் பற்றி பள்ளி ஆசிரியைக்கு பதிலளித்த ட்ரம்ப் மனைவி

0 1297

டெல்லி குழந்தைகள் பற்றி உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனைவி மெலானியா ட்ரம்ப்

சமீபத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அவருடன் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப்பும் வந்தார். அப்போது மெலானியா ட்ரம்ப் டெல்லியில் உள்ள சர்வோதயா அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உரையாடினார்.

மேலும் அந்த பள்ளியில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார். இந்நிலையில் சுற்றுப்பயணம் முடிந்து அமெரிக்கா சென்ற மெலானியா தான் பார்வையிட்ட சர்வோதயா பள்ளி குறித்தும் அங்கு படிக்கும் மாணவர்கள், மற்றும் பள்ளியின் வசதிகள் குறித்தும் பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவில் ”சர்வோதயா பள்ளியின் குழந்தைகள் தனக்கு அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பள்ளி வகுப்பறைகளின் சூழல், மற்றும் அங்கு நடத்தப்படும் ”மகிழ்ச்சி” பாடத்திட்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இந்த திட்டத்தை அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பின்பற்றலாம் என குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்க்கு சர்வோதயா பள்ளியின் ஆசிரியை”மனு குலாதி” என்பவர், உங்கள் வருகை எங்களுக்கு புது நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது என மெலானியாவை குறிப்பிட்டு அந்த ஆசிரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவை கண்ட மெலானியா ”உங்கள் பள்ளி குழந்தைகளிடம் இருக்கும் சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பதற்கு நன்றி” என பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

ஒரு மிகப்பெரும் நாட்டின் அதிபரின் மனைவியாக இருக்கும் மெலானியா ட்ரம்ப், ஒரு முறை மட்டுமே சென்ற பள்ளியின் ஆசிரியரை குறிப்பிட்டு பதிலளித்ததை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments