இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரிக்க முடிவு

0 2166

பிரசாத் ஸ்டுடியோ இடம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த இளையராஜாவை காலி செய்யுமாறு ஸ்டுடியோ நிர்வாகம் வலியுறுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது 40 ஆண்டுகள் இருந்தவரை கூடுதலாக சில நாட்கள் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பிய நீதிபதி, உரிமையியல் நீதிமன்றம் விசாரணையை 2 வாரத்துக்குள் முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments