சிவகளைப் பரம்பில் பழங்காலத்தைச் சேர்ந்த இரும்பு எடைக்கற்கள் கண்டெடுப்பு

0 942

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே சிவகளையில் பழங்காலத்தைச் சேர்ந்த இரும்பாலான இரண்டு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகளையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரம்பு உள்ளது. ஆதிச்சநல்லூரைப் போன்று இந்தப் பரம்பிலும் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. தமிழரின்  தொன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏதுவாகச் சிவகளைப் பரம்பிலும் ஆதிச்சநல்லூரிலும் அடுத்த வாரம் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் சிவகளைப் பரம்பில் இரும்பாலான இரண்டு எடைக்கற்களை ஆசிரியர் மாணிக்கம் கண்டுபிடித்துள்ளார். பெரியது 5 புள்ளி 7 கிலோ எடையும், சிறியது 2 புள்ளி 8 கிலோ எடையும் கொண்டுள்ளன. இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments