3 பேரை கொலை செய்த வழக்கில் கொலையாளிக்கு தூக்கு

0 1903

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரைச் சேர்ந்தவர் பேச்சித்தாய். இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகளை அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்ற ஆண்டவர் என்ற நபர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த பேச்சித்தாயின் புகாரின் பேரில் முத்துராஜை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த முத்துராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேச்சித் தாயையும் அவரது மற்றொரு மகளான மாரியையும் தெருவில் வழிமறித்து வெட்டிக் கொன்றார். அத்துடன் மட்டுமன்றி பேச்சித் தாயின் வீட்டுக்குச் சென்ற முத்துராஜ், அங்கிருந்த பேச்சித் தாயின் தந்தை கோவிந்தசாமியையும் வெட்டிக் கொன்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் முத்துராஜுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமார் தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments