சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு.. பா.ஜ.க. சார்பில் பேரணிகள்..!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் அதற்கு எதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்தக் கோரியும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. சார்பில் பேரணிகள் நடைபெற்றன.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து தலைமைச்செயலகம் வரை நடைபெற்ற பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சிறப்பு அழைப்பாளர் நடிகர் ராதாரவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்தக் கோரி தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோட்டில் பா.ஜ.க. தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற பேரணியின் போது கலவரத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்களை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது
தேனியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து ஸ்டேட்பேங்க் திடல் வரை நடைபெற்ற பேரணியில் பா.ஜ.க.வினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Comments